Monday, September 10, 2007

தமிழில் நவீன நாடக மரபுப் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்தில் படித்தேன்।

அதில் காணப்பட்ட வரி ஒன்று என்னை யோசிக்க வைத்தது। பிரபல நவீன

அல்லது பின் நவீனத்துவ எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார்:' தப்பாட்டம்

என்ற அடித்தட்டு மக்களின் இசை பேரா।ராஜுவின் 'நந்தன் கதை' யில் பயன்

படுத்தப்பட்ட போது॥ ' என்று தொடங்கித் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார்।

நானும் 'நந்தன் கதை' என்ற ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன்।அதைப் பேரா।

ராஜு என்பவர் இயக்கியிருக்கிறார்। என் நாடகத்திலும் 'பறை' ஒரு முக்கிய

இடம் பெறுகிறது। நவீன அல்லது பின்நவீனத்வ எழுத்தாளர் கூற்றினின்றும்

இன்னொரு பேரா।ராஜு என்பவர் 'நந்தன் கதை' என்ற நாடகம் எழுதியிருக்க

வேண்டுமென்று தோன்றுகிறது।

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்கலைப் பழகப் பேராசிரியர், ' இந்திரா

பார்த்தசாரதியின் 'நந்தன் கதை'யில் இல்லாத 'பறை'யைப் பேரா।ராஜு

இந்நாடகத்தில் அறிமுகப் படுத்தியபோது, நாடகத்துக்கு ஒரு புதுப் பரிமாணம்

கிடைத்தது' என்று எழுதியிருந்தார்। என் நாடகத்தின் உச்ச கட்டம், 'பறைக்கும்

பரதத்துக்குமிடையே நிகழும் போட்டிதான்।

இவர்கள் யாவரும் எழுதுவதைப் பார்க்கும்போது, 'நந்தன் கதை'யின் ஆசிரியர்

நானா அல்லது பேரா।ராஜுவா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது।

பேராசிரியர்களும், நவீன அல்லது பின் நவீனத்வ எழுத்தாளர்கள் கூறுவது

தவறாக இருக்கமுடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலப் பள்ளிக்கூடமொன்றில், 'ஹாம்லெட்'

எழுதியவர் யார் என்று கேட்டபோது, பெரும்பான்மையான மாணவர்கள்,

' லாரென்ஸ் ஒலிவியர்' என்றார்களாம்। அதுதான் என் நினைவுக்கு வருகிறது।